இளைஞர் யுவதிகள் இலங்கையை விட்டு வெளியேற ஆர்வம் காட்டுவது ஏன் ?

0
16

வெளிநாடு செல்வதற்காக தம்மை பதிவு செய்யும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் இருந்து பல இளைஞர் யுவதிகள் நேற்று கொழும்புக்கு படையெடுத்து இருந்தனர்.

இவர்கள் வெளிவிவகார அமைச்சின் முன் அதிகாலை ஒரு மணியிலிருந்து வரிசையில் நின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாடு செல்ல எதிர்பார்ப்பவர்கள் தம்மை வெளிவிவகார அமைச்சில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளமைக்கு அமைய இவர்கள் வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல எதிர்பார்த்திருக்கும் இலங்கையர்கள், கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக தமது பயணத்தை தொடர முடியாத நிலையில் இருந்தனர்.

இந்த நிலையில், நாடளாவிய ரீதியில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில், வெளிநாடுகளுக்குச் செல்ல ஏராளமானோர் தம்மை பதிவு செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here