இவ் வருட இறுதிக்குள் நாட்டு சனத்தொகையில் 15 மில்லியன் பேருக்கு தடுப்பூசி ஏற்றப்படும்.

0
20

கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் தொடர்பான தகவல்களை
பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக கொவிட் 19 தடுப்பூசி தொடர்பிலான ஜனாதிபதி
செயலணியின் தலைவர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி
பெற்றுக்கொள்ளாதவர்கள் அல்லது ஒரு தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக்கொண்டவர்கள்
எனவும் லலித் வீரதுங்க குறிப்பிட்டார்.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி ஊடக மையம், நேற்று (29) திறந்து வைக்கப்பட்டது.
அங்கு நடத்திய முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.

“எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் முதலாம் கட்டத்தின் கீழ், 30 வயதுக்கு மேற்பட்டோரில்
11.5 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்படும்” என்றார். இரண்டாம் கட்டத்தின் கீழ், 04 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்படும் எனத் தெரிவித்த அவர், இவ் வருட இறுதிக்குள் நாட்டு சனத்தொகையில் 15 மில்லியன் பேருக்கு தடுப்பூசி ஏற்றப்படும் என்றார். 






LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here