இஷாலினியின் பெற்றோருக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படும் பொலிஸ் அதிகாரி ஒருவர் விசாரணைக்கு உட்படுத்த பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0
21

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் தீக் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த டயகம சிறுமி இஷாலினியின் பெற்றோருக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படும் பொலிஸ் அதிகாரி ஒருவர் விசாரணைக்கு உட்படுத்த பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இது குறித்து பொலிஸார் விசேட விசாரணை ஆரம்பித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வௌியிட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தில் பணிபுரியும் பொலிஸ் பரிசோதகரே இவ்வாறு சிறுமியின் பெற்றோருக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பொலிஸ் அதிகாரி இதற்கு முன்னர் ரிசாத் பதியுதீனின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றியதாகவும் அவரது தொலைபேசி அழைப்புகள் குறித்து விசாரணை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here