இஷாலினி ரிஷாட் பதியுதீனின் வீட்டிற்கு அருகிலுள்ள அறையொன்றில் தனியாக தங்க வைக்கப்பட்டார்.

0
22

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த இஷாலினி தொடர்பில் மற்றுமொரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது இஷாலினியை, ரிஷாட் பதியுதீனின் வீட்டிற்கு அருகிலுள்ள அறையொன்றில் தனியாக தங்க வைத்திருந்தமை விசாரணைகளில் மூலம் தெரியவந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி முதித்த விதானபத்திரண தெரிவித்துள்ளார்.

18 வயதுக்கு குறைவான சிறுமியொருவரை இரவு நேரங்களில் தனியான அறையொன்றில் பாதுகாப்பற்ற முறையில் தங்க வைப்பது, தண்டனைக்குரிய குற்றம் என அவர் குறிப்பிட்டார்.

குறித்த சிறுமியை இவ்வாறு நடத்திய குற்றச்சாட்டு தொடர்பில், குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுவோருக்கு 2 முதல் 10 வருடங்கள் வரை சிறைத் தண்டனையை வழங்க முடியும். அத்துடன், சிறுவர்களை விற்பனை செய்தல், கொள்வனவு செய்தல் மற்றும் அவற்றுக்கு உதவி புரிதல் ஆகிய குற்றச்சாட்டுக்களுக்கு, இலங்கை தண்டனை சட்டக் கோவையின் பிரகாரம், குற்றவாளிகளுக்கு 360 C சரத்துக்கு அமைய 20 வருடங்கள் சிறைத் தண்டனையை வழங்க முடியும்.

தாமதமாகியேனும், இஷாலினியின் மரணம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், பொலிஸின் விசாரணைகள் தொடர்பில்  திருப்தியடைய முடியாது.

எனினும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சகலருக்கும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை என்ற விதத்தில் தாம் தண்டனையை பெற்றுக்கொடுக்க முன்னின்று செயற்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here