இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேமில் யூதர்கள் 3வது யூத தேவாலயம் நிர்மாணிக்க திட்டமிடுவதாக தெரிவிக்கப்படுகிறது .

0
137

இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேமில் யூதர்கள் தமது 3 ஆவது தேவாலயத்தை கட்டுவதற்கு திட்டமிட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில்,யூதர்களால் தமது திட்டத்தின் படி அல் அக்ஸா மசூதி காணப்படும் இடத்தில் தமது 3 ஆவது தேவாலயத்தை நிர்மாணிப்பதற்காக அல் அக்ஸா மசூதி ஒருவேளை இடிக்கப்படும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் அவை உலக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தாது என தெரிவிக்கப்படுகின்றது.

யூதர்கள் கட்டுவதற்கு திட்டமிட்டுவருகின்ற அந்த 3வது யூத தேவாலயம் பற்றியும், அந்த தேவாலயத்தை நிர்மாணித்தால் உலக யுத்தம் ஏற்படலாம் என்றும் பலரும் அச்சம் கொள்கின்றார்கள். ஏன் என்றால் எந்தவொரு அதிர்ச்சியுமின்றி Dome Of The Rock கட்டிடம் ஊடகங்களால் தினமும் காண்பிக்கப்படும் போது அல் அக்ஸா மசூதி உடைக்கப்படவில்லை என்ற விம்பமே மக்கள் மத்தியில் தோன்றும்.

காரணம் Dome Of The Rock கட்டிடமே அல் அக்ஸா மசூதியாக மக்கள் மனதில் பதிந்துள்ளது.திட்டமிட்டு பதிக்கப்பட்டும் விட்டது. அத்துடன் Dome Of The Rock கட்டிடத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் மறைவிடமும்,முகமது நபி விண்ணுலகம் சென்றது அந்த இடம் என்றும்,அவை யூதர்களால் அழிக்கப்படவில்லையென்பதையும் நிரூபிப்பதாகவே அமைந்துவிடும்.

அது மாத்திரமின்றி அல் அக்ஸா மசூதி இடிந்து விழ வேண்டும் என்பதற்காக அந்த மசூதியை சுற்றி இரு மருங்கிலும் தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் இஸ்ரேல் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

ஏற்கனவே இரண்டு முறை நில நடுக்கத்தால் அல் அக்ஸா மசூதி இடிந்து விழுந்த வராலாற்று பின்னணியில் மற்றுமொரு நிலநடுக்கத்திற்கு இஸ்ரேல் காத்துக்கொண்டிருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here