இ.போ.ச. பஸ்ஸொன்றும், ஓட்டோவொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஓட்டோவில் பயணித்த மூவரின் நிலை கவலைக்கிடம்.

0
21

இ.போ.ச. பஸ்ஸொன்றும், ஓட்டோவொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியதில் 14 பேர் காயமடைந்து ஹல்துமுல்ல பிரதேச வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   ஹல்துமுல்ல – களுபான என்ற இடத்தில் இன்று(7)  இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.   பலாங்கொடையிலிருந்து பண்டாரவளையை நோக்கி வந்து கொண்டிருந்த இ.போ.ச. பஸ், எதிர்த்திசையில் சென்ற ஓட்டோவுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் ஓட்டோவில் பயணித்த மூவருடன் பஸ்ஸில் பயணித்த 11 பேரும் காயங்களுக்குள்ளாகினர்.   ஓட்டோவில் பயணித்த மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக  வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.   ஹல்துமுல்ல பொலிசார் இவ் விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here