உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது -இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா

0
70

பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் காலப் பகுதியில் திருமணங்கள் மற்றும் மக்கள் ஒன்று கூடும் வகையிலான பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கு தடை விதிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்கு செல்வதற்கும் அனுமதிக்கப்பட மாட்டாது இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் ஏற்கனவே அறிவித்தமைக்கமைய எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும்.

எனினும் மீண்டும் 23 ஆம் திகதி புதன்கிழமை இரவு 10 முதல் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரை பயணக்கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here