உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான Ever Ace நேற்று (06) அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

0
26

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான Ever Ace நேற்று (06) அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச முனையத்துக்கு குறித்த கப்பல் வருகை தந்துள்ளதாக துறைமுகங்கள் அதிகார சபை அறிவித்துள்ளது. முதற்தடவையாக கொழும்பு துறைமுகத்தை அக்கப்பல் வந்தடைந்தது. நேற்று (06) நள்ளிரவு வரையிலும் நங்கூரமிடப்பட்டிருக்கும் என அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

Evergreen நிறுவனத்துக்குச் சொந்தமான 400 மீட்டர் நீளமான குறித்த கப்பலில்
24,000 பாரிய கொள்கலன்கள் உள்ளன. 61.5 மீட்டர் அகலம் கொண்ட இந்த
கப்பல், 22.6 கடல் மைல் வேகத்தில் நகரக்கூடியது.

அந்தக் கப்பல் ஜூலை மாதம் 28 ஆம் திகதி ஆசிய – ஐரோப்பிய சமுத்திரம்
வரை பயணத்தை ஆரம்பித்தது அக்கப்பல், கிங்டாவோ, ஷங்காய்,
நிங்போ, தாய்பே, யன்டியன், ரொட்டர்டேம், ஹேம்பர்க் மற்றும் பெலிக்ஸ்டோவ் ஆகிய
துறைமுகங்களுக்கு பயணித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here