உலக நீரில் மூழ்கும் தடுப்பு நாள், ஆண்டுதோறும் ஜூலை 25 அன்று நினைவுக்கொள்ளப்படுகிறது.

0
39

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும், சுமார் 800 பேர் நீரில் மூழ்கி இறக்கின்றனர்.

இதில் தற்செயலான விபத்துக்களே நீரில் மூழ்கி இறப்பதற்கான, இரண்டாவது முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை நீரில் மூழ்கி இறந்தவர்களில் பெரும்பாலோர் 21 முதல் 60 அகவைக்குட்பட்டவர்கள் என்று சுகாதார அமைச்சின் ஆலோசகர் சமூக மருத்துவர் சமிதா சிரிதுங்க தெரிவித்தார்.

உலக நீரில் மூழ்கும் தடுப்பு நாள், ஆண்டுதோறும் ஜூலை 25 அன்று நினைவுக்கொள்ளப்படுகிறது.

உலகளாவிய ரீதியில், ஆண்டுதோறும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் நீரில் மூழ்கி இறக்கின்றனர்.அவர்களில் மூன்றில் ஒரு பங்கு இறப்பு, தெற்காசிய நாடுகளிலிருந்து பதிவாகியுள்ளது.

உலகளாவிய தரவுகளின்படி, 1 முதல் 9 அகவை வரையிலான குழந்தைகளே அதிகமாக நீரில் மூழ்கி இறக்கின்றனர்.

எனினும் கொரோனாத் தொற்றுநோயால் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக நீரில் மூழ்கும் சம்பவங்கள் குறைந்து வருவதாக மருத்துவர் சிரிதுங்க தெரிவித்துள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here