எங்குமே எரிவாயு சிலிண்டர் வெடிக்கவில்லை, எரிவாயு அடுப்பு தான் வெடிக்கின்றது.

0
10

சமையல் எரிவாயு உருளை கொள்கலன்களில் வெடிப்புகள் தொடர்பில் பரப்பப்படும் கருத்துக்கள், அரசியல் இலாப நோக்கம் கொண்டவை என சிறிலங்கா அரசாங்கத்தின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராய்ச்சி (Tissa Kuttiarachchi) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், எரிவாயு அடுப்புகளிலேயே பிரச்சினை உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

”கடந்த சில நாட்களாக எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பதாக தவறான ஒரு செய்தி பரவுவதை நான் அமைதியாக அவதானித்துக்கொண்டிருந்தேன். நான் சவால் விடுகின்றேன் முடிந்தால் எனக்கு காட்டுங்கள் எரிவாயு சிலிண்டர் எங்கு வெடித்தது ? எங்குமே எரிவாயு சிலிண்டர் வெடிக்கவில்லை, எரிவாயு அடுப்பு தான் வெடிக்கின்றது.

இது சரியாக வயிற்று வலியாக இருக்கும் போது கால் வலி பற்றி பேசுவதை போன்ற ஒரு செயல். ஆகவே நான் மிகத்தெளிவாக ஞாபகமூட்ட விரும்புகின்றேன்.

எரிவாயு கலவையில் பிரச்சினை இல்லையென மீண்டும் மீண்டும் கூறுகின்றார்கள். எரிவாயு சிலிண்டரில் பிரச்சினை இல்லை என கூறுகின்றார்கள். ஊடகங்களில் ,சமூக வலைத்தளங்களில் நன்றாக தெரிகிறது எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கவில்லை.

உண்மையாகவே இந்த பிரச்சினை எரிவாயு அடுப்பில் தான் உள்ளது. நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள், நாம் இப்போது பரிசோதனை செய்யவேண்டியது எரிவாயு தொடர்பாகவோ, எரிவாயு சிலிண்டர் தொடர்பாகவோ அல்ல. எரிவாயு அடுப்புக்கள் தொடர்பாகவே தேடிப்பார்க்க வேண்டும்.

தற்பொழுது சந்தைக்கு வரும் புதிய அடுப்புக்களில் மேலாக ஒரு கண்ணாடி உள்ளது. அப்படியான பாதுகாப்பு கண்ணாடிகள் மிகவும் விலை அதிகமானவை.

இப்படியான பாதுகாப்பு கண்ணாடிகள் பொருத்தப்பட்ட அடுப்புக்களே இன்று சந்தையில் குறைந்த விலையில் 2000, 3000 ,6000 ரூபாய்க்குள் கிடைக்கின்றன. ஆகவே சிலவேளை இவ்வாறான அடுப்புக்கள் மிகவும் குறைந்த தரமுடையதாக இருக்கலாம்.

நாம் அனைத்து இடங்களிலும் வெடிப்பு சம்பவங்களில் பார்த்தது எரிவாயு அடுப்பு தான். ஆகவே , இந்த பிரச்சினை எரிவாயு சிலிண்டரிலோ , எரிவாயுவிலோ இல்லை எரிவாயு அடுப்பில் தான் உள்ளதென்று ஏன் எம்மால் சிந்திக்க முடியாது.

ஆகவே இவையனைத்தையும் அரசியல் இலாப நோக்கத்திற்கு எடுத்துக் கொண்டு ஒரே வரிசையில் செல்வதால் தான் பிரச்சினை. எமது நாட்டின் நிலை இன்று அதுதான், யாராவது ஒன்றை கூறினால் அதை பெரிதுப்படுத்துவது. இளைஞர்களும் அப்படித்தான் ஊடகங்களும் அப்படித்தான்.

ஆகவே அறிவுபூர்வமாக சற்று வேறு விதத்தில் யோசிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here