எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்திற்கொண்டு 3 ஆம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி மருந்தை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளது.

0
10

இலங்கையில் எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்திற்கொண்டு 3 ஆம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி மருந்தை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளதாக  இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண கூறியுள்ளார்.

அனுராதபுரத்தில் வைத்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

இயன்றளவு விரைவில் மக்கள் அனைவரும் தடுப்பூசி மருந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று மாத்திரம் 81 ஆயிரத்து 208 பேருக்கு 3 ஆம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இதுவரை பூஸ்டர் தடுப்பூசி மருந்தை பெற்றவர்களின் எண்ணிக்கை 1.3 மில்லியனை தாண்டியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் கோவிட் தொற்றுக்கு உள்ளான மேலும் 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 614 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் இன்று இரவு எட்டு மணி வரையான காலப்பகுதி வரை புதிதாக 583 பேர் புதிதாக கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், மொத்த கோவிட் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையும் 05 இலட்சத்து 72 ஆயிரத்து 726 ஆக அதிகரித்துள்ளது.  

இலங்கையில் உள்ள 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி மருந்தை செலுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

கோவிட் வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக கூறியுள்ள அவர், 2 ஆம் கட்ட தடுப்பூசி மருந்தைப் பெற்று பெற்று 3 மாதங்கள் நிறைவடைந்த 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி மருந்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கூறியுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here