எதிர்வரும் 06ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற அமர்வில் பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம்?

0
84

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்றம் பிரவேசிப்பதற்காக தங்களது ஆசனங்களை வழங்க அந்த கட்சியின் 4 தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தயாராகவிருப்பதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், ஜயந்த கெட்டகொட, மர்ஜான் பலீல் மற்றும் பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோரே தயாராகவிருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, எதிர்வரும் 06ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற அமர்வு வாரத்தில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்து கொள்ளக்கூடும் என ஆளும் கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here