எந்தவொரு கெமராவிலும் சிறுமி ஹிஷாலினி தீ வைத்துக் கொண்டதாகக் கூறப்படும் காட்சி பதிவாகவில்லை.

0
12

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த 16 கண்காணிப்புக் கெமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகள் பரிசோதிக்கப்பட்டபோது அவற்றில் எந்தவொரு கெமராவிலும் சிறுமி ஹிஷாலினி தீ வைத்துக் கொண்டதாகக் கூறப்படும் காட்சி பதிவாகவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வீட்டு சமையலறைக்கு பின்னால் அமைந்துள்ள அறையில் தனது உடலில் தீ வைத்துக் கொண்ட சிறுமி, நீர் நிறைந்து காணப்பட்ட ஓர் இடத்தை நோக்கி ஓடியதாக தெரிவிக்கப்பட்டது. இதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே குறித்த பகுதியில் காணப்பட்ட சிசிரிவி கெமராவும் பரிசோதிக்கப்பட்ட போதும் அது இயங்கவில்லை என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு அந்த கெமரா இயங்காமை தொடர்பில் ரிஷாத் பதியுதீனின் மனைவியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டபோது, ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளமையால் அதனை திருத்தியமைக்க முடியாமல் போனதாக அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு அவர் வீட்டில் இல்லாத காரணத்தினால் வெளியிலிருந்து தொழில்நுட்ப சேவையாளர்கள் அழைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here