எம்.பி, ரிஷாட்டை விரைவாக விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – மனோ கணேசன்

0
18

அரசியல் காரணிகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட்டை தடுத்து வைக்கக்கூடாதென தெரிவித்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி, ரிஷாட்டை விரைவாக விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

“இன்று ரிஷாட்டுக்கு நடந்தது நாளை எமக்கும் நடக்கலாம்” என்றார்.
நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய
அவர், அரசியல் காரணிகளுக்காக ஒரு பாராளுமன்ற உறுப்பினரைத்
தடுத்துவைக்க கூடாது. எவ்விதக் குற்றச்சாட்டுகளும் இல்லாது ரிஷாட்
தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளவில்லை
என்றால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை 100 நாள்களுக்கும் அதிகமாக தடுப்புக்
காவலில் வைத்திருப்பது, பாராளுமன்ற உறுப்பினரின் கௌரவத்துக்கு
முரணானது. இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விரைவாக
தீர்மானம் ஒன்றை எடுத்து, ரிஷாட்டை விடுதலை செய்ய வேண்டும் என்றார்.
இதேவேளை, தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1,000 ரூபாய் சம்பள
உயர்வு வழங்கப்பட்டால், மாதமொன்றுக்கு 25,000 ரூபாய் சம்பளம் கிடைக்க
வேண்டும். ஆனால், 10, 12 நாள்கள்தான் வேலை வழங்கப்படுகிறது என்றார்.
கம்பனிகளின் தேவைளுககு ஏற்ப சம்பளம் வழங்கப்படுகிறது. புதிய வேதன
திருத்தச் சட்டத்தில் 25 நாள்கள் வேலை கட்டாயம் வழங்கப்பட
வேண்டுமெனவும் குறைந்தப்பட்ட சம்பளம் 500 ரூபாய் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனை 1,000 ரூபாயாக மாற்றினால் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய்
நாள் சம்பளம் கிடைக்கும். இவ்வாறு இல்லாமையால்தான் கம்பனிகள்,
நீதிமன்றம் சென்றுள்ளன என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here