எரிவாயுவின் விலையில் மாற்றம் இல்லை.

0
88

சமையல் எரிவாயுவின் (காஸ்) விலையை அதிகரிக்க முடியாது என வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு தீர்மானித்துள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 640 மற்றும் 750 ரூபா என்ற அடிப்படையில் அதிகரிக்க வேண்டும் என காஸ் நிறுவனங்கள் இரண்டும் முன்வைத்திருந்த கோரிக்கை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக அமைச்சரவை உபகுழு இன்று (21) ஜனாதிபதி செயலகத்தில் கூடியது.

இதன்போதே காஸ் விலை அதிகரிப்பு மேற்கொள்ளக் கூடாது என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக உபகுழுவின் அங்கத்தவரான அமைச்சர் பந்துல குணவரத்தன தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here