எரிவாயுவின் விலை அதிகரிக்கபட உள்ளது ஆனால் எப்போதென்று இப்போது கூற முடியாது .

0
125

கவலையாக இருந்தாலும், எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட்கப்ரால், சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்படும் என்பது உண்மை. ஆனால்,அது எப்போது நடக்கும் எனத் தனக்குத் தெரியாதெனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அஜித் நிவாட்கப்ரால்,  மக்கள் சிரமத்தில் இருக்கிறார்கள் என்பது நன்றாத் தெரியும். மக்களின் கஷ்டங்கள் எமக்குப் புரியும். இவ்வாறான சூழ்நிலையிலேயே சிரமமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது. எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருளின் விலையை அதிகரிக்காவிட்டால் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும். கவலையாக இருந்தால் எரிபொருளின் விலை அதிகரிக்க வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தில் காணப்பட்ட எரிபொருள் விலை சூத்திரம் தற்போதும் இருந்திருந்தால், எரிபொருளின் விலைகள் இன்னும் அதிகரித்திருக்குமெனவும், எரிபொருளின் விலை அதிகரிப்புடன் சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்க உள்ளது. அதிக விலையை செலுத்தி எரிவாயுவைக் கொள்வனவு செய்து, குறைந்த விலைக்கு வழங்க முடியாது. ஆனால் இதனையே எரிவாயு நிறுவனங்கள் தொடர்ந்து செய்து வருகின்றன என்றார்.

எனவே, சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படுமென்பது உண்மை. ஆனால், அது எப்போது என தனக்குத் தெரியாதெனவும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here