எஸ்.வியாழேந்திரனின் பாதுகாப்பு உத்தியோகத்தரை எதிர்வரும் ஜூலை மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு .

0
36

மட்டக்களப்பு துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பாதுகாப்பு உத்தியோகத்தர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு – பிள்ளையாரடி பகுதியில், நேற்றைய தினம் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மட்டக்களப்பு நீதவான் ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில் இன்று பிரசன்னப்படுத்தப்பட்டார்.

இதன்போது சந்தேகநபரை எதிர்வரும் ஜூலை மாதம் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here