எஸ்.வியாழேந்திரனின் பாதுகாப்பு உத்தியோகத்தர், மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

0
24

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பாதுகாப்பு உத்தியோகத்தர், மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 21ஆம் திகதி, மட்டக்களப்பு – பிள்ளையாரடி பகுதியில், இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச்சூட்டில், 34 வயதுடைய ஒருவர் பலியானார்.

சம்பவம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலையாக்கப்படாத நிலையில், வழக்கு விசாரணை இடம்பெற்றது .

இதன்போது சந்தேக நபரான பாதுகாப்பு உத்தியோகத்தரை எதிர்வரும் 12ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் ஏ.சி.எம். றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here