ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த நபர் உயிரிழப்பு ,காத்தான்குடியைச் சேர்ந்த நபர் கைது.

0
18

இம்மாதம் 3ஆம் திகதி விபத்துக்குள்ளான ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரொருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (10) உயிரிழந்தார்.

இந்த விபத்துத் தொடர்பாக காத்தான்குடியைச் சேர்ந்த ஓட்டோ சாரதியை, ஏறாவூர் பொலிஸார் நேற்று (11) கைது செய்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த ஏறாவூர் நபர், வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியில் கொண்டிருந்த போது மாடு குறுக்கிட்டமையால் எதிரே வந்த ஓட்டோவில் மோதி விபத்துக்குள்ளாகியதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here