ஐக்கிய அரபு எமிரேட் செல்பவருக்கு மகிழ்ச்சியான செய்தி.

0
8

எதிர்வரும் 2022 ஜனவரி முதலாம் திகதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வாரத்திற்கு வேலை நாட்கள் நான்கரை நாட்களாக குறைத்து அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு கூட்டமைப்பு நாடுகளான ரஸ் அல் கைமா , அபுதாபி, சார்ஜா, துபாய், அஜ்மன், உம்-அல்-குவைன் மற்றும் புஜைராவில் இந்த நேரம் அறிமுகமாகவுள்ளது.

அதன்படி , திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 7.30 முதல் மாலை 3.30 வரை 8 மணி நேர பணியும் வெள்ளிக்கிழமை காலை 7.30 முதல் மதியம் 12 வரை 4.30 மணி நேர பணியும் நடைமுறைக்கு வருகிறது. வெள்ளி மதியம் 1.15 மணிக்கு தொழுகை முடிந்ததிலிருந்து சனி , ஞாயிறு உட்பட 2.5 நாட்கள் விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தியை அதிகரித்தல், குடும்பத்தை கவனித்தல் ஆகிய காரணங்களுக்காக இந்த புதிய பணித்திட்டம் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஐக்கிய அரபு நாடுகளில் பணிபுரியும் ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். தற்போது, அரபு நாடுகளில் வெள்ளிக்கிழமை மட்டுமே விடுமுறை நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here