ஐக்கிய மக்கள் சக்தியினர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கட்சியில் இருந்து தற்காலிகமாவேனும் நிறுத்த வேண்டும்- டிலான் பெரேரா

0
17

சிறுமி ஹிஷாலினி மரணம் விவகாரத்தில் எதிர்க்கட்சியினரும், மலையக அரசியல்வாதிகளும் இரட்டைவேடம் போடுகிறார்கள் எனத் தெரிவித்த, ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, ரிஷாட் பதியுதீன் எம்.பியை ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து இடை நிறுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வினவினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், இச்சிறுமியின் மரணத்தை தொடர்ந்து பல விடயங்கள் தற்போது
வெளியாகியுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் தரப்பினருக்கும், அரசாங்கத்துக்கும் இடையில் தொடர்பு உள்ளதாக எதிர்த்தரப்பினர் குறிப்பிடும் நிலையில், அவ்வாறான எவ்விதத் தொடர்பும்
கிடையாது என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும் என்றார்.

பொறுப்பான எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியினர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கட்சியில் இருந்து தற்காலிகமாவேனும் நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்த அவர், இவ்விடயத்தில் எதிர்க்கட்சியினரும், எதிர்த்தரப்பில் உள்ள மலையக அரசியல்வாதிகளும் இரட்டை வேடம் போடுகிறார்கள் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here