ஒமிக்ரோன் வைரஸ் தோற்றாளர் ஒருவர் பேருவளையில் அடையாளம் காணப்பட்டார்.

0
4

பேருவளையில் இருந்து ஒமிக்ரோன் தொற்று ஒன்று பதிவாகியுள்ளதாக பேருவளை சுகாதார வைத்திய அதிகாரியின் நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் முதித அமரசிங்க நேற்று (2ம் திகதி) இரவு தெரிவித்தார்.

பேருவளை சீனக்கோட்டையைச் சேர்ந்த 30 வயதுடைய மாணிக்கக்கல் வியாபாரி என்பவரே தொற்றுக்கு இலக்கானவர் ஆவார்.

இதனையடுத்து, அவரது நெருங்கிய குடும்பங்களைச் சேர்ந்த ஒரு குழுவினரும் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், பேருவளை சீனக்கோட்டைப் பகுதியில் நாளை (3) PCR பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக சுகாதார அதிகாரி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here