ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 226 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

0
41

சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 226 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

அவ்வணி சார்பில் பிரித்திவ் ஷா 49 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

சஞ்சு சம்சன் 46 ஓட்டங்களையும், சூரியகுமார் யாதவ் 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய 3 விக்கெட்டுக்களையும், பிரவீன் ஜயவிக்கிரம 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

போட்டியின் 23 ஆவது ஓவரில் மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டியை 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்த நடுவர்கள் தீர்மானித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here