ஒரு மில்லியன் சீன சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வர உள்ளனர்

0
37

இலங்கையில் பயணக் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டவுடன் ஒரு மில்லியன் சீன சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஐந்து முன்னணி சுற்றுலாக் குழுக்களில் ஒன்றான கைசா பயணக் குழு, சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித ஹோகன்னவிற்கு (Palitha Hoganna)இந்த உறுதிமொழியை அளித்துள்ளது.

நகர்ப்புற புதுப்பித்தல் மற்றும் மேம்பாட்டு உச்சிமாநாட்டில், தூதுவர் பாலித கோஹன்ன சீன சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சந்தித்தார், அங்கு வைத்தே கைசா பயணக் குழு மேற்படி வாக்குறுதியை அளித்தது.

இலங்கையின் பரந்த வனப்பகுதி, காட்டு யானை, மக்கள் தொகை, ஆசியாவின் மிகச்சிறந்த சிறுத்தைகளின் தொகுப்பு, மாபெரும் நீல திமிங்கலங்கள் மற்றும் கடலோர திமிங்கல இனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய இலங்கையின் பசுமைச் சான்றிதழ் குறித்து தூதுவர் இதன்போது விரிவாக விபரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here