ஒரே குடும்பத்தில் மூன்று பேரை பழி எடுத்த கொரோனா.

0
75

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தாய்,தந்தை மற்றும் அவர்களது மகனும் உயிரழந்துள்ளதாக பெரதெனியா முருத்தலாவா பொது சுகாதார பரிசோதகர் கபிலா விக்ரமநாயக்க தெரிவித்தார்.

உயிரிழந்தவர்கள் சிறிபால ராஜபக்ஷ (72), அவரது மனைவியான ஷிலா ராஜபக்ஷ (70) மற்றும் அவர்களது மகன் தம்மிக ராஜபக்ஷ (38), எனவும் இவர்கள் பெரதெனியாவின் முருத்தலாவாவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிறிபாலா 3 ஆம் திகதியும், அவரது மனைவி ஷிலா ராஜபக்ஷ 14 மற்றும் அவரது மகன் 23 ஆம் திகதியும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்ததாக பொது சுகாதார பரிசோதகர் விக்ரமநாயக்க தெரிவித்தார்.

தம்மிகவின் இறுதி சடங்குகள் இந்த மாதம் 24 ஆம் திகதி கண்டியில் உள்ள மஹியாவா தகன கூடத்தில் செய்யப்ட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here