ஓட்டமாவடி பிரதேசத்தில் பொது மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி பெற்றுக் கொண்டனர் .

0
61

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வழங்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசியினை ஏற்றிக் கொள்ள மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு (11) ஆம் திகதி தடுப்பூசி வழங்கும் நிகழ்வு ஓட்டமாவடி வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் அறுபது வயதை தாண்டிய பெருந்திரளான மக்கள் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ள ஆர்வத்துடன் வருகை தந்ததை காணமுடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here