ஓட்டமாவடி மஜ்மா நகர் மையவாடியில் இதுவரை 1,001 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0
23

கொரோனா தொற்றினால் மரணமடைந்தவர்களின்  உடல்களை  நல்லடக்கம் செய்யும் ஓட்டமாவடி மஜ்மா நகர் மையவாடியில் நேற்று (14) புதன்கிழமை 9 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.

குறித்த மையவாடியில் கடந்த மார்ச் மாதம் 5 ஆம் திகதி முதல் இதுவரை 1,001 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

இவர்களில் வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர் உட்பட 946 முஸ்லிம்களின் உடல்களும், 24 இந்துக்களின் உடல்களும், 16 கிறிஸ்தவர்களின் உடல்களும், 15 பெளத்தர்களின் உடல்களும் அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தவிசாளர் ஏ.எம்.நெளபர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here