கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எரிபொருள் விலையை அரசாங்கம் அதிகரிக்கவில்லை- அமைச்சர் நாமல் ராஜபக்ஷ

0
132

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையே எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு காரணமாக அமைந்தது என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

எனினும், தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் விலையில் ஓரளவு அதிகரிப்பு இருக்க வேண்டும் என அமைச்சரும் அதிகாரிகளும் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் சாத்தியம் ஏற்பட்டால் எரிபொருள் விலைகள் குறைக்கப்படும் என்றும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எரிபொருள் விலையை அரசாங்கம் அதிகரிக்கவில்லை. நாட்டின் தொற்று நிலைமை மற்றும் உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றைக் கொண்டு இந்த முடிவை எடுக்க வேண்டியிருந்தது.

தனிப்பட்ட விருப்பத்துடன் எடுக்கப்பட்ட முடிவு இது அல்ல, நடைமுறையில் உள்ள நிலைமைகள் இந்த முடிவெடுக்க கட்டாயப்படுத்தின என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here