கடந்த தேர்தலில் குருநாகல் மாவட்ட மக்களுக்கு தந்தை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது- ரோகித ராஜபக்ச

0
20

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) புதல்வர் ஒருவர் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில் அது தொடர்பில் தனது நிலைப்பாட்டை ரோகித ராஜபக்ச (Rohitha Rajapaksa) அறிவித்துள்ளார்.

வடமேல் மாகாண முதலமைச்சர் பதவிக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அண்மையில் பல செய்திகள் வெளிவந்திருந்தன. இந்நிலையிலேயே அவர் தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர்  தெரிவித்துள்ளதாவது,

அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. கடந்த தேர்தலில் குருநாகல் மாவட்ட மக்களுக்கு தந்தை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதனை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே தான் குருநாகல் மாவட்டத்திற்கு சென்றிருந்தேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடமேல் மாகாண முதலமைச்சர் பதவிக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகரவும் (Dayasiri Jayasekara) போட்டியிட எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here