கடல் ஆமைகளும், டொல்பின் மீன்களும்.மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் கரை ஒதுங்கி வருகிறது.

0
30

மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகளும், ஒரு டொல்பின் மீனும் இன்று (19) கரை  ஒதுங்கியுள்ளது .

இதேவேளை இன்னும் பல ஆமைகள் கடலில் கரை ஒதுங்கி  வருவதாக, இன்று கடல் தொழிலுக்கு சென்று திரும்பிய மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள், கடற் சூழல்  பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உட்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டதுடன், இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டொல்பின் உள்ளிட்ட கடலாமைகளை பகுப்பாய்விற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர்.

வா.கிருஸ்ணா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here