கடல் நீர் 100 அடிக்கு உள்வாங்கியதால் பொதுமக்கள் அச்சம்.

0
28

புதுச்சேரியில் திடீரென கடல் நீர் 100 அடிக்கு உள்வாங்கியதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.

2004-ல் வந்த சுனாமியின் தாக்கம் இன்னும் மக்கள் மத்தியில் போகவில்லை. அதனால் இயல்பாகவே கடலில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் அதனால் பீதி பற்றி கொள்கிறது.

மேலும் அடிக்கடி கடல் நீர் உள் வாங்கும்போதெல்லாம் அது சுனாமியாகத்தான் இருக்குமோ என்ற சந்தேகமும் சேர்ந்துவிடுகிறது. அப்படித்தான் நேற்று மாலை புதுச்சேரியிலும் நடந்துள்ளது.

புதுச்சேரியில் இப்போதுதான் தொற்று பாதிப்புகள் குறைந்து, சுற்றுலா பயணிகள் வர ஆரம்பித்துள்ளனர். புதுச்சேரி அரசு கடந்த 20 ஆண்டுகளாக கடற்கரை காந்தி சிலை அருகே இருந்து மூன்று கிலோமீட்டர் பரப்பளவிற்கு கடற்கரையில் கற்களைக் கொட்டி தடுப்புச் சுவர் அமைத்து கடல்சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்படுவதைத் தடுத்துவருகிறது.

திடீரென இங்குள்ள கடல் உள்வாங்கியது.. சுமார் 100 அடி தூரம் வரை கடல் திடீரென பின்வாங்கியது. காந்தி சிலை பின்புறம் முதல் துறைமுகம் வரை உள்ள பகுதி வரை உள்வாங்கி காணப்பட்டது. இதனால் மணற்பரப்பு அதிகளவில் தென்பட்டது. பீச்சுக்கு வந்திருந்த மக்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

சற்று நேரத்தில் சரியாயிடும் என்று காத்திருந்தனர்.. ஆனால், நீண்ட நேரத்துக்கு கடல் உள்வாங்கியபடியே இருக்கவும், கரைக்கு பலர் திரும்பிவிட்டனர். அதற்கு பிறகுதான் கடல் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதற்குள் வந்திருந்த மக்கள் இதனை பார்த்து வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டனர்.

இதைபற்றி மீன்வளத்துறை அதிகாரிகள் சொல்லும்போது, இயற்கைக்கு மாறாக கடலில் நடந்துள்ளதை கடல் உள்வாங்கியது சுட்டிக்காட்டுகிறது. ஆழ்கடலில் அடுக்குகள் நகர்ந்து கடல் உள்வாங்கி இருக்கலாம். அல்லது கடல் பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டு அதன் காரணமாகவும் கடல் இருக்கலாம். அதற்கான காரணத்தை ஆராய வேண்டும் என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here