கட்டாய தேவை உள்ளவர்களுக்காக மாத்திரம் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணிகளை முன்னெடுக்க தீர்மானம்.

0
20

பாதுகாப்பான சுகாதார வழிமுறைகளை பின்பற்றி, மட்டுப்படுத்தப்பட்ட அளவானோருக்கு மாத்திரம் வெளிநாட்டு கடவுச்சீட்டை விநியோகிக்க குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பத்தரமுல்லையில் அமைந்து அத்திணைக்களத்தின் தலைமை காரியாலயத்தின் அதிகாரிகள் சிலருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறைந்தளவான பணியாளர்களைக் கொண்டு சேவைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சாதாரண சேவையின் கீழ் வெளிநாட்டு கடவுச்சீட்டை வழங்கும் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ள அதேவேளை, கட்டாய தேவை உள்ளவர்களுக்காக மாத்திரம் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணிகளை முன்னெடுக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here