கப்பலின் பணிப்பாளர் பிணையில் விடுதலை.

0
38

எக்ஸ்பிரஸ்-பேர்ள் கப்பலில் தீப்பற்றியமைத் தொடர்பில் சந்தேகநபராக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அக்கப்பலின் உள்நாட்டு  பிரதி நிறுவனத்தின் மற்றொரு பணிப்பாளரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த நிறுவனத்தின் மற்றுமொரு பணிப்பாளரான பண்டுல வீரசேகர, இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜரானதையடுத்து, அவர் கைதுசெய்யப்பட்டு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கின் நான்காவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள குறித்த சந்தேகநபர், சந்தேகநபராகப் பெயரிடுவதற்கு அவருக்கு எதிரான போதுமான சாட்சியங்கள் முன்வைக்கப்படவில்லை என, குறித்த முறைப்பாட்டுக்காக ஆஜரான பிரதி சொலிசிட்டர் நாயகம் மாதவ தென்னக்கோன் அறிவித்தார்.

இதன்போது, சந்தேகநபரை பிணையில் விடுதலை செய்வதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு, சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மெத்தேகொட கோரிக்கை விடுத்தார்.

இதற்கு அமைய, சந்தேகநபரை ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கபிணையிலும் பத்து இலட்ச ரூபாய் சரீரப் பிணை இரண்டிலும் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here