கற்பகதரு” வேலைத்திட்டத்திற்கு இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனினால் தென்னங்கன்றுகள் வழங்கிவைப்பு.

0
26

வீட்டுக்கு வீடு “கற்பகதரு” 40 இலட்சம் தென்னங்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் வந்தாறுமூலையில் உள்ள இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அவர்களின் ஏறாவூர்ப்பற்றிற்கான பிராந்திய பணிமனை வளாகத்தின் இன்று இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பயனாளிகளுக்கான தென்னங்கன்றுகளை வழங்கிவைத்துள்ளார்.

அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் அதிதிகளின் உரையினைத் தொடர்ந்து, 250 பயனாளிகலுக்கு தலா மூன்று தென்னங்கன்றுகள் வீதம் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர்கள், முற்போக்கு தமிழர் கழகத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பயனாளிகளும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here