கல்முனைப் பிரதேசத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (24) முதல் கொவிட்-19 முதலாவது தடுப்பூசி ஏற்றுவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0
45

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் எதிர்வரும் சனிக்கிழமை (24) முதல் கொவிட்-19 முதலாவது தடுப்பூசி ஏற்றுவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்தார்.

 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கும், நீண்டநாள் நோயாளிகள், முதியோர் இல்லங்களில் வசிப்பவர்கள், வைத்தியசாலை மற்றம் சுகாதார நிலையங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர் மற்றும் ஊழியர்களின் நெருங்கிய உறவினர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இத் தடுப்பூசிகளை, அருகாமையிலுள்ள வைத்தியசாலைகள் அல்லது சுகாதார வைத்தியதிகாரி அலுவலகங்கள் அல்லது சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ள தடுப்பு மருந்து வழங்கும் இடங்களுக்குச் சென்று ஏற்றிக்கொள்ளுமாறும் தெரிவித்தார்.

அத்துடன், சுகாதார வைத்தியதிகாரி, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் கிராம சேவகர்கள் ஆகியோருடன் தொடர்புகொண்டு, தடுபூசியைப் பெற்றுக்கொள்ளலாமெனவும் தெரிவித்தார். 

இவ்வாரம் நீண்ட விடுமுறைகள் உள்ளமையால், பொதுமக்கள் கனிசமாக ஒன்றுகூடுவதை தவிர்த்து, சுகாதார நடைமுறைகளை உரியவகையில் பேணுமாறும் அவர் அறிவுறுத்தினார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here