கல்முனையின் மருதமுனைப் பிரதேசம் முற்றாக முடக்கப்படாது.

0
35

கல்முனையின் மருதமுனைப் பிரதேசத்தில் கொரோனா தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஒரு வார காலத்துக்குள் அங்கு ஆள் நடமாட்டக் கட்டுப்பாட்டை அமுல்படுத்துவதென நேற்று இடம்பெற்ற சுகாதாரத்துறையினருடனான கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மருதமுனையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் மற்றும் பிசிஆர். முடிவுகளின் பிரகாரம் தொற்றாளர்கள் இனங்காணாமையால் முற்றாக முடக்குவதில்லை என. இன்று கல்முனை மாநகர சபை மேயர் சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை மருதமுனை பிரதேசத்தில் உள்ள சகல வர்த்தக நிலையங்களையும் மாலை 6 மணியுடன் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டள்ளதுடன் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here