கல்லடி கடற்கரையில் பாரிய அளவிலான குளவிக்கூடு – அகற்றும் பணியை முன்னெடுத்த மாநகர சபை!

0
964

கல்லடி கடற்கரையில் காணப்பட்ட பனை மரமொன்றில் இருந்த பாரியளவிலான குளவிக்கூட்டை அப்பகுதிக்கு வருகைதரும் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப்பயணிகள் மற்றும் அப்பகுதி மீனவர்களின் நலன்கருதி மாநகரசபையால் அதனை அகற்றும் பணியினை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பகுதியில் வசிக்கும் சிலரது முறைப்பாட்டிற்கு அமைய குறித்த பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதெனை மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் உள்ளிட்ட குழுவினருடன், மாநகர தீயணைக்கும் படையினரும் குறித்த இடத்திற்கு சென்று சுமார் இரண்டு அடிவரை நீளமான குறித்த குளவிக்கூட்டினை அகற்றுவதற்கான செயற்பாட்டினை பாதுகாப்பாக முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here