களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் கோவிலுக்குள் திருவிழா முடியும் வரை பக்தர்கள் வருவதற்கு முற்றாகத் தடை .

0
407

களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் கோவிலின் வருடாந்த உற்சவம், நேற்று (06) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த உற்சவம், எதிர்வரும் 15ஆம் திகதி தீத்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளதுடன், இதன்போது, கோவிலுக்குள் பக்தர்கள் எவரும் வருவதற்கு முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் கோவிலின் தலைவர் கணபதிப்பிள்ளை பாஸ்கரன் தெரிவிக்கையில்,

“நாட்டில் கொரோனா தொற்று மிகவும் மோசமாக தீவிரமடைந்துள்ள காரணத்தால், கோவில் சார்ந்து மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டியுள்ளது.

“அதனால், உற்சவம் ஆரம்பிக்கப்படும் நாளிலிருந்து திருவிழா முடியும் வரைக்கும் கோவில் கடமைகளுக்காக 15 பேர் மாத்திரம்தான் கோவிலினுள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அத்தோடு, வழக்கமாக இடம்பெறும் அன்னதானம் வழங்கும் செயற்பாடும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. 

“எனவே, இந்நிலைமையைக் கருத்திற்கொண்டு, கோவிலுக்கு வருவதை பக்தர்கள் முற்றாகத் தவித்துக் கொள்ளவும் என மிகவும் பணிவாக வேண்டிக் கொள்கின்றோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here