களுவாஞ்சிகுடி வைத்தியசாலை முன்பாக தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் போராட்டம் .

0
66

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் வைத்தியசாலை முன்பாக இன்று (11) பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும் வைத்திய ஊழியர்களுக்கு மாத்திரம் பகிரப்படுகின்ற கொடுப்பனவு, அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் வழங்குவதற்கு, சுகாதார அமைச்சர் மற்றும் அரசாங்கமும் பொறுப்புக் கூற வேண்டும் என்பதனை நினைவுபடுத்துகின்றோம்.

அதனால் எமது கீழ்வரும் கோரிக்கைகளை வழங்குவதற்கு சுகாதார அதிகாரிகளுக்கு வலியுறுத்துகின்றோம்.

வைத்திய சேவையினை ஒப்பிட்டு 78 வீதம் கொடுப்பனவு அதிகரிப்பினை வழங்குதல்.

பொது நிர்வாக சுற்றறிக்கையின் படி அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் விசேட விடுமுறை வழங்குதல்.

அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் விசேட விடுமுறை நாளில் கடமைக்கு சமூகமளிக்கும் ஊழியர்களுக்கு விடுமுறை நாள் கொடுப்பனவு வழங்குதல்.

அனைத்து சுகாதார ஊழியர்களையும் ஆட்சேர்ப்பு செய்தல், வெற்றிடங்களை நிரப்புதல் விரைவாக மேற்கொள்ளல்.

தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக எண் 95முகக் கவசம், பாதுகாப்பான உடை ஆகிய வசதிகளை அனைத்து சுகாதார ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக வழங்குதல்.

சுகாதார ஊழியர்களுக்கு கொவிட் -19 தொற்று ஏற்படும் போது, சிகிச்சை வழங்குதல் மற்றும் தனிமைப்படுத்தலுக்கான முறையான முறையொன்றினை தயாரித்தல்.

கொவிட் -19 கடமையினை மேற்கொள்கின்ற அனைத்து ஊழியர்களுக்கும் முறையாக உணவு வழங்குதல் மற்றும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நாட்களில் அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் உணவு வழங்குவதற்காக முறையான சலுகை செயற்திட்டமொன்றினை நிறுவுதல். போன்ற கோரிக்கைகளை இதன்போது அவர்கள் முன்வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here