களுவாவளை இளைஞன் கல்லடி வாவியில் குதித்தது ஏன்?

0
57

மட்டக்களப்பு, கல்லடி பாலத்தின் மேல் இருந்து  வாவிக்குள் இன்று (23) பிற்பகல் 3 மணிக்கு குதித்த இளைஞனை, வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

களுவாவளை 4ஆம் சிறி முத்துமாரியமன் கோவில் வீதியைச் சேர்ந்த 32 வயது இளைஞனே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார் எனவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இளைஞன், தான் கொண்டுவந்த பை மற்றும் செருப்பு ஆகியனவற்றை, பாலத்தின் மேல் வைத்துவிட்டு வாவியில் குதித்துள்ளார்.

இதனை, அப்பகுதியில் தோணியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கண்டு, உடனடியாக வாவியில் குதித்து இளைஞனைக் காப்பாறிக் கரைசேர்த்து   மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், இச் சம்பவம் தொடர்பான விசாணைகளை  காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here