கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று திருகோணமலையில் இடம் பெற்றுள்ளது.

0
57

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில், திருகோணமலை மத்திய பஸ் நிலையத்துக்கு முன்னால் இன்று (23) கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போராட்டத்தில், மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  மரத்தில் இருந்து விமுந்தவரை மாடு முட்டுவது போல,  எரிபொருட்களின் விலையை அரசாங்கம் அதிகரித்துள்ளதாக, அவர்கள் சாடினர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here