காத்தான்குடியில் பாரிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

0
58

அரசாங்கத்தின் சுபிட்ஷத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு இலட்சம் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் முயற்சியினால் காங்கயனோடை மாவிலக்கத்துறை வீதி சுமார் ரூபா 7,720,050.25 செலவில் காபட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கான அடிக்கல் நாட்டும் விழாவும் நினைவுப்பதாகை திரை நீக்கம் செய்யும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களும் , வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண பணிப்பாளர்,
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர், மண்முனை பற்று பிரதேசசபை தவிசாளர், பிரதேசசபை உறுப்பினர்கள் ,முன்னாள் நகரசபை தவிசாளர் AL. மர்சூக், முன்னாள் நகரசபை உறுப்பினர் ULMN. முபீன், கட்சியின் முக்கியஸ்தர் M. மதீன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here