காவல்துறை அதிகாரியாக பட்டைய கிளப்பும் அமலா .

0
57

கன்னடத்தில் பெரும் வெற்றிபெற்ற ’லூசியா’, ’யூ டர்ன்’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய பவண் குமார் புதிதாக த்ரில்லர் கதைக்களத்தில் இயக்கியிருக்கும் தெலுங்கு வெப் சீரிஸில் நடிகை அமலா பால் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

‘குடியெடமைதே’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸில் அமலா பாலுடன் நடிகர் ராகுல் விஜய் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இறுதியில், இந்த வெப் சீரீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

ஆனால், எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில், விரைவில் இந்த வெப் சீரிஸ் தெலுங்கில் பிரபலமான ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது.

இதனை, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் இயக்குநர் பவண் குமார். ஏற்கனவே, நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக பவண் குமார் இந்தியில் ‘லீலா’ என்ற வெப் சீரிஸை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கடந்த 2018 ஆம் ஆண்டு சமந்தா நடிப்பில் வெளியான ’யூ டர்ன்’ படத்தை பவண் குமாரே இயக்கினார். இவரது, லூசியா படம்தான் சித்தார்த் நடிப்பில் ‘எனக்குள் ஒருவன்’ படமாக ரீ மேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here