கிண்ணையடி துறையும் மக்களின் அவல நிலையும் .

0
311

மட்டக்களப்பு மாவட்ட கோறளைப்பற்று கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிண்ணையடித்துறை ஊடாக பயணிக்கும் மக்கள் ஆற்றை கடப்பதற்கு மிகவும் சிரமப்படுவதை காணக்கூடியதாக உள்ளது .
பயணிப்பதற்கு ஒரே ஒரு பாதை மட்டுமே பாவனையில் உள்ளது .பாதையும் துருப்பிடித்த நிலையில் காணப்படுவதோடு,இயந்திரம் பொருத்தும் இடமும்
சேதமடைந்துள்ளது .
பாதையில் பொருத்தப்பட்டுள்ள இயந்திரம் பழுதடைந்த நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர்.இது சம்பந்தமாக பலதடவை முறைப்பாடு செய்தும் இயந்திரத்தை திருத்தி கொடுப்பதற்கோ அல்லது புதிய இயந்திரம் வாங்குவற்கோ நடவடிக்கை ஏதும் எடுக்காமல் பொறுப்பு கூறவல்ல அதிகாரிகள் பாராமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

தினம் தினம் பயணிக்கும் மக்கள் ஆற்றின் இரு கரையிலும் கட்டப்பட்டுள்ள பழுதடைந்த நிலையில் உள்ள கயிற்றின் துணையுடனேயே உயிரை கையில் பிடித்து கொண்டு ஆற்றில் பயணம் செய்யும் அவல நிலை காணப்படுகிறது .
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் யாராவது கிண்ணையடித்துறையடி பாதைக்கு இயந்திரம் பெற்று கொடுத்து பாமர மக்களின் ஆற்று பயணப்பிரச்சனைக்கு தீர்வை வழங்குமாறு கிண்ணையடித்துறை மக்கள் சார்பில் எமது ஊடகம் வேண்டு கோள் விடுக்கிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here