கிராமத்தில் தும்பு உற்பத்தித் தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நட்டு, அதன் வேலைகளையும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆரம்பித்து வைத்தார்.

0
26

நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கிராமிய உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவித்தல் தொடர்பாகவும் சுய பொருளாதாரத்தை ஊக்குவிப்பது தொடர்பாகவும் பல வேலைத்திட்டங்களை சமீப காலமாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்னெடுத்து வருகின்றார்.

இதற்கமைய, கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை, நாசிவன் தீவு கிராமத்தில் தும்பு உற்பத்தித் தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நட்டு, அதன் வேலைகளையும் நேற்று முன்தினம் (14) ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது, மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, கோறளைப்பற்று பிரதேச செயலாளர் கோ.தனபாலன், பிரதேச திட்டமிடல் பணிப்பாளர் கங்காதரன், கோறளைப்பற்று தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here