கிழக்கு மாகாணத்தில் கல்வியை அரசியல் மயப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறதா ?

0
5

கிழக்கு மாகாணத்தில் கல்வியை அரசியல்மயப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவது தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதன் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் கடும் பாதிப்பினை எதிர்கொள்ளும் நிலைக்குக்குத் தள்ளப்பட்டுள்து.

குறிப்பாக இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கல்வியில் பின்தங்கிய மாகாணங்களாகவுள்ள நிலையில், இவ்வாறு அரசியல்மயப்படுத்தப்படும் செயற்பாடுகள் பாரியளவில் கல்வியில் தாக்கம் செலுத்தும் என கல்வியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வடக்குகிழக்கில் கல்வியை மேம்படுத்துவதற்காக கடந்த காலத்தில் பல்வேறு தரப்பினரும் புலம்பெயர்ந்த மக்களும் தாயகத்தில் மும்முரமாக செயற்பட்டவரும் நிலையில், ஆசிரியர் இடமாற்றம் அதிபர்கள் இடமாற்றம்,வலய மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர்கள் நியமனங்களில் முழுமையாக அரசியல் நிலை தலையீடு காணப்படுவதாக கவலை தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக தமிழ்தேசியம் சார்ந்தவர்கள் கல்வி நடவடிக்கைகளுக்கான உதவிகள் மற்றும் ஏனைய கல்விசார் நடவடிக்கைகளை மேற்கொள்வதறகு கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் மற்றும் வலய கல்வி அலுவலகங்கள் ஊடாக தடைவிதிக்கும் நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here