கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளராக சிங்கநாயகம் குலதீபன் ஆளுநரால் நியமனம்!!

0
53

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியை
சேர்ந்த சிங்கநாயகம் குலதீபன் கிழக்கு மாகாண பிரதி
பிரதம செயலாளர் (நிதி) பதவிக்
கான நியமனத்தினை கிழக்கு
மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத்திடமிருந்து பெற்று தனது
கடமைகளை ஆரம்பித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபையின்
வரலாற்றில் மட்டக்களப்பை
சேர்ந்த ஒருவர் இப்பதவிக்கு
நியமிக்கப்பட்ட முதலாவது சந்த
ர்ப்பமாகவும், இலங்கை கணக்கா
ளர் சேவையின் விசேட தரத்தி
னைப் பெற்று நியமிக்கப்பட்ட
முதலாவது சந்தர்ப்பமாகவும்
கருதப்படுகின்றது.

மேலும் இவர் இலங்கை கணக்காளர் சேவையில் 1992ம் ஆண்டு நடாத்தப்பட்ட திறந்த
போட்டிப்பரீட்சையில் தெரிவு
செய்யப்பட்டு, மண்முனைப்பற்று
ஆரையம்பதி பிரதேச செயலகத்
தில் கணக்காளராக கடமையை
ஆரம்பித்து, பின்னர் மட்டக்களப்பு
போதனா வைத்தியசாலையில்
கணக்காளராகவும் சுகாதார அமைச்சில் பணிப்பாளர் (நிதி) யாகவும், கல்வியமைச்சில் பிரதம கணக்காளராகவும் கடமையாற்றிக் கொண்டிருக்கையில் இவ்வாண்டு கணக்காளர் சேவையின் விசேட தரத்தினை பெற்றுக்கொண்ட இவர் மருந்து உற்பத்தியாக்கல், விநியோகித்தல் தொடர்பான இராஜாங்க அமைச்சின் பிரதான
நிதி உத்தியோகத்தராக நியமிக்
கப்பட்டார். இவ்வேளையில்
கிழக்கு மாகாண பிரதி பிரதம
செயலாளர் (நிதி) வெற்றிடமேற்
பட்டதனால் இவர் அப்பதவிக்கு
நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு சிவானந்தா, பட்டிருப்பு ஆகிய தேசிய பாடசாலைகளின்
பழைய மாணவரான இவர் யாழ்ப்பாண பல்கலைக்களக வியாபார நிர்வாகமானி சிறப்பு பட்டத்தையும், வியாபார நிர்வாகத்தில் முதுமானி பட்டத்தையும் பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here