கொவிட் -19 தொற்று தீவிரமாக பரவுவதால் எதிர்வரும் இரண்டு வாரங்கள் தீர்மானமிக்கதாகும்.

0
22

கொவிட் -19 தொற்று தீவிரமாக பரவுவதால் எதிர்வரும் இரண்டு வாரங்கள் தீர்மானமிக்கதாகும்.  அதனால் முறையான தீர்மானங்களை எடுப்பதற்கு தாமதிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கொவிட் -19 காரணமாக பல உயிர்கள் நாட்டில் இல்லாமல்போகும் என்பதை மறந்துவிடவேண்டாம் என பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய கொவிட் -19 நிலைமையில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாளாந்தம் கொவிட் -19 தொற்றாளர்கள் 2,500க்கும்  அதிகமாக இனம்காணப்பட்டு வருவதுடன் மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் 90 ஐ தாண்டியுள்ளது. இவ்வாறான நிலைமையில் எதிர்வரும் 14 நாட்களுக்குள் வைரஸ் பரவலை கட்டுப்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியமாகும்.

நோயாளர்கள் அதிகரிப்பதை கட்டுப்படுத்தாவிட்டால் சுகாதார பிரிவினருக்கு இந்தநிலைமையை தாங்கிக்கொள்ள முடியாமல்போகும். அதேபோன்று முறையான தீர்மானங்களை எடுப்பதற்கு தாமதிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாட்டில் பல உயிர்கள் கொவிட் காரணமாக இல்லாமல்போகும் என்பதை மறந்துவிடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here