கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசியின் மூன்றாவது டோஸையும் கொடுக்க தயார்- அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல

0
25

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசியின் மூன்றாவது டோஸையும் கொடுக்க தயாராக இருப்பதாக வெகுஜன ஊடக மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கனவே அதற்கான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு அவர்களின் அடையாளத்தை எளிதாக்க சிறப்பு அடையாள அட்டை வழங்கும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

அண்மைய புள்ளிவிபரங்களின்படி, கொரோனாவால் ஏற்படும் இறப்புகளில் பெரும்பாலானவை தடுப்பூசி போடாததால் ஏற்பட்டவை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அதன்படி நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் விரைவாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here