கொலை செய்யப்பட்ட காவலாளிக்கு கொரோனா தொற்று.

0
32

கழுத்தறுத்து கொலைசெய்யப்பட்ட வனாத்தவில்லு- மங்களபுர பிரதேசத்தில் தனியார்
தோட்டத்தின் காவலாளிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதென, புத்தளம் ஆரம்ப வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

புத்தளம் ஆரம்ப வைத்தியசாலையில் நேற்று (14) முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போதே கொலையுண்டவருக்கு இத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த காவலாளி தங்கியிருந்த தற்காலிக காவல் குடிசையிலிருந்தே நேற்று (14) அதிகாலை இவர், சடலமாக மீட்கப்பட்டாரென்றும், தனிப்பட்ட தகராறே கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.

எனினும் இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்திலிருந்து தப்பிச்
சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here